எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் டெஸ்டில் 96 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார் இளம் வீராங்கனை ஷாஃபாலி வர்மா.
டிக்ளேர் செய்தது...
இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி தனது முதல் இன்னிங்ஸில் 121.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, வியாழக்கிழமை முடிவில் 60 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. ஹர்மன்பிரீத் கௌர் 4, தீப்தி சர்மா 0 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
96 ரன்கள்...
ஷஃபாலி வர்மா 13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 96 ரன்கள் விளாசி நூலிழையில் சதத்தை தவறவிட்டார். ஸ்மிருதி மந்தனா 14 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் சேர்த்து வெளியேற, பூனம் ரௌத் 2 ரன்களுக்கு வீழ்ந்தார். ஷிகா பாண்டே டக் அவுட்டாக, கேப்டன் மிதாலி ராஜ் 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இங்கிலாந்து தரப்பில் ஹீதர் நைட் 2, கேட் கிராஸ், நடாலி ஸ்கீவர், சோஃபி தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.
அதிகபட்ச ரன்...
இந்திய மகளிர் அணியில் முதல் டெஸ்டில் இதற்கு முன்னர் 1995-ல் சந்தர்கந்தா கெளல் 75 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது. அந்தச் சாதனையை முறியடித்து முதல் டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஷஃபாலி வர்மா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


