எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு 'எச் 1 பி விசா' பெற்று செல்வோரின் கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு 'எச் 4' விசாவை உடனடியாக வழங்க, ஜோ பைடன் அரசு முடிவு செய்துள்ளது.
அமெரிக்க குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி பணிபுரியும் பிற நாட்டினருக்கு எச் 1 பி விசா வழங்கப்படுகிறது. இவர்களின் மனைவி அல்லது கணவன் மற்றும் 21 வயதுக்குட்டப்பட்ட குழந்தைகளுக்கு எச் 4 விசா வழங்கப்படுகிறது. இந்த எச் 4 விசா பெற்று, அமெரிக்காவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குறிப்பாக பெண்கள், அங்கு வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது
. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின், எச் 1 பி விசா மற்றும் எச் 4 விசாக்கள் வழங்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எச் 4 விசா வைத்துள்ளோர் அமெரிக்காவில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் ஜனவரியில் பதவியேற்றார். முன்னாள் அதிபர் டிரம்ப் நிர்வாகம் அமல்படுத்திய பல்வேறு தடைகளை ரத்து செய்ததுடன், எச் 4 விசாதாரர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்கு விதித்த தடையும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து எச் 1 பி விசாவில் அமெரிக்க வருவோரின் மனைவி அல்லது கணவன் மற்றும், 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எச் 4 விசாவை உடனடியாக வழங்க பைடன் அரசு முடிவு செய்துள்ளது. இது அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


