முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய வகை 'ஒமைக்ரான்' வைரஸ்: மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கேள்வி

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

புதிய வகை ‘ஒமைக்ரான்’ கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்று சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

‘ஒமைக்ரான்’ வைரஸ், இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் ஆபத்தானதாக அறியப்படுகிறது. இதனால் உலக நாடுகள் உஷாராக இருக்கின்றன. இருப்பினும் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங்குக்கு பரவி விட்டது.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உலகளவில் குறைவாக இருந்தாலும், ஐரோப்பிய நாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவத்தொடங்கி இருப்பது புதிய பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதே போன்று, ஜெர்மனியிலும், இத்தாலியிலும் ஒமைக்ரான் வைரஸ் கால் பதித்துவிட்டது.

இந்நிலையில் புதிய வகை ‘ஒமைக்ரான்’ கொரோனா வைரசுக்கு எதிராக மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்று சுப்ரீம்கோர்ட் நீதிபதி என்.வி.ரமணா கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு விசாரணையின்போது, புதியவகை வைரஸ் தொடர்பாக தலைமை நீதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பி இருந்தார். 

இதற்கு பதில் அளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், புதிய வகை வைரசினை சமாளிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்று நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து