முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2014 நா.,மன்ற தேர்தலில் கெஜ்ரிவால் கட்சி போட்டி

வெள்ளிக்கிழமை, 23 நவம்பர் 2012      அரசியல்
Image Unavailable

சம்பல், நவ.23 -  நாடாளுமன்றத்துக்கு 2014-ம் ஆண்டு  நடைபெறும் தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடும் என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் நண்பர் குமார் விஸ்வாஸ் தெரிவித்தார். சம்பல் பகுதிக்கு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு நடைபெறும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கட்சி போட்டியிடும். போட்டியிடும் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் டெல்லியிலிருந்தோ அல்லது லக்னோவிலிருந்தோ வெளிவராது. யார் போட்டியிடுவார்கள் என்பது பற்றி மக்கள் முடிவு செய்வார்கள்.

அமைப்போ அல்லது கட்சியோ இல்லாமல் எப்படி போட்டியிட முடியும் என்று கேட்டபோது, 1977-ம் ஆண்டு 2 மாதங்களில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 17 மாநிலங்களில் அது வேரூன்றியது என்றார்.

அன்னா ஹஸாரேவுக்கும், கெஜ்ரிவாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதே? எப்படி வெற்றி பெற முடியும் என்று கேட்டபோது, ஊழல் பற்றி மக்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்  

அவர்கள் இருவருக்கும் ஒரே சிந்தனை, ஒரே கருத்து தான் உள்ளது என்று அவர் பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago