எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புது டெல்லி : தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற 6-ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகிற 4-ம் தேதி ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகும். இந்த மேலடுக்கு சுழற்சி 6-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் தீவிரம் அடையும். அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ அல்லது அதைவிட தீவிரமாகவோ மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை புயல் எச்சரிக்கையாக மாறுமா? என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருகிறது. இதனிடையே வட இந்தியாவில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் 100 டிகிரி வெப்பத்தை தாண்டி உள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலம் பாந்தாவில் 116 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. இந்த தீவிர வெப்பமானது வடமேற்கு, வடகிழக்கு, வடக்கு இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 3 நாட்களுக்கு வெப்ப அலையாகவோ, தீவிர வெப்ப அலையாகவோ தொடரும் என்றும், அதற்கு பிறகு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


