எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, சென்னையில் இன்று நடைபெறும் மாரத்தான் போட்டியில் இங்கிலாந்து துணை மேயர் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் போட்டி தொடங்க உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,
இது 5, 10, 21 மற்றும் 42 கிலோ மீட்டர் தூரம் என 4 பிரிவுகளாக நடைபெறவிருக்கிறது. இதில் 10 வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்க வருகிறார்கள். இந்தியாவின் 20 மாநிலங்களில் இருந்து வீரர்கள் வருகிறார்கள். 42 கிலோ மீட்டர், 21 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டிக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், 2-வது பரிசாக ரூ. 50 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ. 25 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. 10 கிலோ மீட்டர் போட்டிக்கு முதல் பரிசாக ரூ. 50 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ. 25 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ. 15 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. 5 கிலோ மீட்டர் போட்டிக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், 2-வது பரிசு ரூ.15 ஆயிரமும், 3-வது பரிசு ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு தொகைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டி நடைபெறும் தினத்தன்று காலை 7.45 மணியளவில் ஆல்காட் பள்ளி மைதானத்தில் வழங்கவுள்ளார். இந்த மாரத்தான் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் அமீஸ்புரி நகரின் துணை மேயர் மோனிகா தேவேந்திரன் பங்கேற்க்க உள்ளார். இந்நிலையில் துணை மேயர் மோனிகா தேவேந்திரனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து உபகரணங்களை வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


