முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடக்கம்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      தமிழகம்
MBBS-Counsil 2022-09-22

Source: provided

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. மாணவர்கள் https://ugreg22.tnmedicalonline.co.in/mbbs22/ என்ற இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 4328 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் அரசு கல்லூரிகளுக்கு ரூ.13,610, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கு 1 லட்சம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தம் 170 இடங்கள் உள்ளன. இதில் சேரும் மாணவர்களுக்கு ரூ.11,610 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணம் நிர்ணயம் குழு நிர்ணயம் செய்துள்ள கட்டணம் வசூலிக்கப்படும். மாணவர்கள் நேற்று (22ம் தேதி ) முதல் 3 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து