எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா,ஏப்.- 23 - இப்போது நடைபெற்று வரும் மன்மோகன்சிங்கின் ஆட்சி இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான ஆட்சி என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் தேர்தல் கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியதாவது, கடந்த 2008 ம் ஆண்டில் ஆட்சிக்கு ஆதரவாக எம்.பிக்களை விலைக்கு வாங்கி லஞ்ச ஊழலை பெரிய அளவில் தொடங்கியது மன்மோகன்சிங் அரசு. தொடர்ந்து 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி திட்ட ஊழல் என கிடைத்த இடத்தில் எல்லாம் ஊழல் செய்து எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு கோடிகளை சுருட்டியது மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு. அரசியல்வாதியாக இல்லாத மன்மோகன்சிங் ஆட்சிக்கு வந்த போது நான் அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். ஆனால் அவர் மிக மிக மோசமான ஆட்சி நடத்துகிறார். 1952 ம் ஆண்டில் இருந்து நான் நமது நாட்டில் நடைபெற்று வரும் ஆட்சியை கவனித்து வருகிறேன். இது வரை நடைபெற்ற ஆட்சிகளிலேயே மிகவும் மோசமானது மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சிதான் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


