எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
வாழைத்தண்டின் மருத்துவ பயன்கள்
- வாழைத்தண்டு சிறுநீரகத்தை பாதுகாக்கிறது மற்றும் பலப்படுத்துகிறது.
- சிறுநீரகக் கோளாறுகளுக்கு முக்கியமான பரிந்துரைக்கப்படுவது வாழைத்தண்டு ஆகும்.
- வாழைத்தண்டில் பொட்டாசியம் உள்ளது. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இவை இரண்டும் இணைந்து சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.
- வாழைத்தண்டை கூட்டு,பொரியல் செய்து சாப்பிடலாம்
- வாழைத்தண்டை ஜூஸாக்கிக் குடித்தால், பலன்கள் அதிகமாகக் கிடைக்கும்.
- வாழைத்தண்டு சாற்றை அப்படியே குடிப்பது கொஞ்சம் கடினமான காரியம்தான்,அப்படிக் குடிக்க முடியாதவர்கள் தேன்,மோர், ஆப்பிள் ஜூஸ் ,ஆரஞ்சு ஜூஸ் அல்லது எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடிக்கலாம்.
- சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்றுகளை நீக்கி, சிறுநீரகப் பாதையை சுத்தமாக்கும்.
- சிறுநீரை அடக்குவதும் சிறுநீரகத்தில் கல் உருவாக காரணமாக அமைகிறது,எனவே சிறுநீர் அடக்குவதை தவிர்க்க வேண்டும்.
- வாழைத்தண்டு சாறு ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவும்
- உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைத்தண்டு நல்ல மருந்து.
- வாழைத்தண்டு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். எனவே, வாழைத்தண்டு சாற்றைத் தொடர்ந்து குடித்துவர ரத்தசோகை குணமாகும்.
- வாழைத்தண்டு இன்சுலினை மேம்படுத்த உதவுவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. இதன் சாற்றை வடிகட்டாமல் குடித்தால், நார்சத்து அதிகமாகக் கிடைக்கும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதைத் தடுக்கும்.
- புகை மற்றும் மது பழக்கத்தை மறக்க வாழைத்தண்டு சாற்றில் கரும்பு சாறை கலந்து அருந்தலாம்.
- சிறிது இஞ்சியை வாழைத்தண்டு சாற்றுடன் சேர்த்து குடித்துவர, வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும்.
- வாழைத்தண்டு சாற்றில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும். மலச்சிக்கலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்.
- வாழைத்தண்டு சாற்றில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. வாரத்துக்கு மூன்று முறை இதை அருந்திவர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- தொடர்ந்து வாழைத்தண்டு சாற்றைக் குடித்துவந்தால், உடல் எடை குறையும். சர்க்கரை மற்றும் கொழுப்பு உடனடியாக ரத்தத்தில் கலப்பதை இதன் சாறு தடுக்கும். கொழுப்பை உடலில் இருந்து நீக்கவும் உதவும். வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும்,நச்சுப்பொருட்களை வெளியேற்றும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


