எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறையில் பட்டப்படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதிக்கு 5 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 289 இடங்கள் இருக்கின்றன. அதில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் கீழ் 21 இடங்களும் மற்றவையில் 259 இடங்களும் உள்ளன. 6 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1660 இடங்கள் இருக்கின்றன. இதில் 762 அகில இந்திய ஒதுக்கீடு இடங்களாகவும், நிர்வாகி இடஒதுக்கீட்டிற்கு 425 இடங்கள், அரசு இடஒதுக்கீட்டிற்காக 822 மற்றும் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 115 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் இடஒதுக்கீட்டிற்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், பேரவையில் அறிவித்தது போல தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை குறைந்த செலவில் சோதனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சித்தா மருத்துவமனை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதில் புதிய ஆராய்ச்சிகள் நடைபெறும் என்றும் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கீழ்ப்பாக்கம் ஒப்பந்தம் செவிலியர்களுக்கு 11 மாதமாக ஊதியம் வழங்காததைப் பற்றி விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
சாம்சனுக்கு பயிற்சியாளர் ஆதரவு
13 Sep 2025சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
13 Sep 2025சிங்காநல்லூர் : கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025