முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் ஹசாரே கிரிக்கெட்: மகாராஷ்டிரா, செளராஷ்டிரா அணிகள் இறுதியில் மோதல்

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      விளையாட்டு
Rudraaj 2022-11-30

Source: provided

மும்பை : விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியின் அரையிறுதியில் அஸ்ஸாம் அணியை மஹாராஷ்டிரமும் கர்நாடக அணியை செளராஷ்டிரமும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

பந்துவீச்சு தேர்வு... 

ஆமதாபாத்தில் நடைபெற்ற மஹாராஷ்டிரத்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற அஸ்ஸாம் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. காலிறுதியில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களுடன் இரட்டைச் சதமடித்து சாதனை படைத்த ருதுராஜ் கெயிக்வாட் இன்றும் அபாரமாக விளையாடினார். 126 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகளுடன் 168 ரன்கள் எடுத்து 45-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அன்கித் பாவ்னே, 89 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் எடுத்தார். 

350 ரன்கள் குவிப்பு...

இதனால் மஹாராஷ்டிர அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் குவித்தது. முக்தா உசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் கடைசியாக விளையாடிய கடைசி 9 ஆட்டங்களில் ஒரு இரட்டைச் சதம், 6 சதங்கள் அடித்துள்ளார் ருதுராஜ்.  அஸ்ஸாம் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சிப்சங்கர் ராய் 78, ஸ்வரூபம் 95 ரன்கள் எடுத்தார்கள். ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

172 ரன்கள் குவிப்பு...

ஆமதாபாத்தில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் கர்நாடகம் - செளராஷ்டிரம் அணிகள் மோதின. டாஸ் வென்ற செளராஷ்டிர அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. கர்நாடக அணி 49.1 ஓவர்களில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க வீரர் ரவிகுமார் சமர்த் 88 ரன்கள் எடுத்தார். கேப்டன் மயங்க் அகர்வால் 1 ரன் மட்டும் எடுத்தார். மனிஷ் பாண்டே டக் அவுட் ஆனார். உனாட்கட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். செளராஷ்டிர அணி 36.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெய் கோகில் 61 ரன்கள் எடுத்தார். ஆமதாபாத்தில் டிசம்பர் 2 அன்று நடைபெறவுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான இறுதிச்சுற்றில் மஹாராஷ்டிரம் - செளராஷ்டிரம் ஆகிய அணிகள் மோதவுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து