எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் முதல் நாளே இந்த நிறுவனத்தின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பட்டியல் இடப்பட்டதை அடுத்து இதன் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல தொழிலாதிவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஐசரி கணேஷ் மற்றும் அவரது மகள் ப்ரீத்தா கணேஷ் ஆகியோர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஐசரி கணேஷ் பேசும்போது ’எங்கள் நிறுவனத்தின் பங்கு தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். வேல்ஸ் நிறுவனம் தொடக்கத்தில் வேல்ஸ் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் தொடங்கப்பட்டது. கடந்த 1992 ஆம் ஆண்டு 39 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது 40 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்றார். தொடர்ந்து எங்கள் நிறுவனத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் முதலீட்டாளர்களுக்கு விரைவில் டிவிடெண்ட் எனப்படும் ஊக்கத்தொகையை வழங்குவதற்கும் முயற்சி செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


