முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் வசந்த உற்சவ விழா: டிக்கெட்டுகள் நாளை வெளியீடு

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      ஆன்மிகம்
thirupathi-2022 11 23

Source: provided

திருப்பதி : திருப்பதியில் வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஏப்ரல் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை வசந்த உற்சவ விழா நடைபெற உள்ளது. கோவிலுக்கு மேற்கு பகுதியில் உள்ள வசந்த மண்டபத்தில் தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஏழுமலையான் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்னபன திருமஞ்சனம் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் உள்ள பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் நாளை காலை 10 மணிக்கு டிக்கெட்கள் Tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஆண்டுதோறும் வசந்த உற்சவ விழா தொடங்கி பவுர்ணமி அன்று நிறைவடைவது வழக்கம் அதன்படி 3-ந்தேதி காலை 7 மணிக்கு ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் 4 மாட வீதிகள் வழியாக வசந்த மண்டபத்தை சென்றடைகின்றனர். பின்னர் பூஜைகள் முடிந்து மாலை கோவிலுக்கு திரும்புகின்றனர்.

4-ந்தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை ஏழுமலையான் 4 மாட விதிகளில் தங்க தேரில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதன்பின் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. 5-ந் தேதி ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஏழுமலையான், சீதாராமர் லஷ்மணர், ஆஞ்சநேயர், ருக்மணி, கிருஷ்ணர் ஆகிய உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் கோவிலுக்கு வந்தடைகின்றனர்.

வசந்த உற்சவம் நடைபெறும் 3 நாட்களும் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தேன், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், சாதம் ஆகியவை மூலம் அபிஷேகம் ஆராதனை நடைபெறுகிறது. மாலை 6 முதல் 6-30 மணி வரை ஆஸ்தானம் கோலாகலமாக நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தையொட்டி வசந்த மண்டபம் பலவண்ண மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது. வசந்த உற்சவம் நடைபெறும் 3 நாட்களும் அஷ்டதள பாத பத்மாராதனை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து