எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை கலாஷேத்ரா விவகாரத்தில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட மாணவிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் காவல்துறை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி, நேற்று கலாஷேத்ரா கல்லூரியில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் சுமார் 5 மணி நேரம் தனிப்பட்ட முறையில் அவர் விசாரணை நடத்தியுள்ளார். பாலியல் புகார் குறித்து 12 மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தியதாகவும், 5 மாணவிகளிடம் காணொலி வாயிலாக விசாரணை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு பேராசிரியர் உள்பட 4 பேர் மீது மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாகவும், இந்த புகார் குறித்த அறிக்கையை திங்கள்கிழமை தாக்கல் செய்ய உள்ளதாகவும் குமரி தெரிவித்துள்ளார்.
தற்போது தேர்வு நேரம் என்பதால் மாணவ, மாணவிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியதாகவும், இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மகளிர் ஆணைய தலைவர் குமரி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


