முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூரில் வரும் 23-ம் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2023      அரசியல்
Edappadi 2020 11-16

சென்னை, திருப்பூரில் தமிழக அரசை கண்டித்து வரும் 23-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

திருப்பூர் மாவட்டத்தில் நடக்கும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளைக் கண்டு கொள்ளாமலும், போதைப் பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமலும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்காமலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமலும், மெத்தனப் போக்கோடு இருந்து வரும் தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் வருகிற 23-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில், பல்லடம், வீரபாண்டி பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையிலும், எம்.எஸ்.எம். ஆனந்தன் முன்னிலையிலும் நடைபெறும். இதில் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து