முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத்தொகை அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2023      விளையாட்டு
ICC

Source: provided

அகமதாபாத் : இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலக கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் சென்னையில் மோதுகிறது. இதையடுத்து, உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது.

இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி, சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுமார் ரூ.33 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு சுமார் ரூ.16 கோடி பரிசும், அரையிறுதியில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கு தலா ரூ.6 கோடி பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குரூப் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.82 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து