முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் மிலாடி நபி கோலாகல கொண்டாட்டம் வாழ்த்துகளை பரிமாறிக கொண்ட இஸ்லாமியர்கள்

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      தமிழகம்
miladi

Source: provided

சென்னை:தமிழகம் முழுவதும் நேற்று மிலாடி நபி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி  இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். 

இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை மிலாடி நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு மிலாது நபி பண்டிகை 28-ம் தேதி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று காலை முதல் மிலாது நபி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டப்பட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய பெருமக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர். சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றது.அப்போது இறைத்தூதர் முகமது நபியின் சிறப்புக்களை பற்றியும் அவரது போதனைகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டனர்.  

இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடென்ட் அபூபக்கர் அளித்த பேட்டியில், மனிதகுலம் இன்றளவும் மாண்புடன் மனிதத்தன்மையுடன், வரைமுறையுடன் இருப்பதற்கு அடித்தளமிட்டது நபிகள் நாயகத்தின் வாழ்வியல் நெறிமுறை தான். 

பிறந்தநாள் முதல் வளர்ந்த காலம் வரை ஒவ்வொரு நாளையும் சிறந்தநாளாய் மாற்றினார் நபிகள். வறுமை வாட்டிய போதும், உடனிருந்தோர் சிறுமை காட்டிய போதும் முகம் கோணாமல் அடுத்தவர் அகம் நோகாமல் புன்னகையால் இதயங்களை வென்ற நபிகளாரின் பிறந்தநாளே மிலாடி நபி. அவரது போதனைகளும், அறிவுரைகளும் இன்றும் நமக்கு அவசியமான தேவை. அனைத்து வேறுபாடுகளும் மறந்து தான் ஈட்டிய பொருள் கொண்டு இல்லாதவர் பசி போக்குவதும்,விரல் கொண்டு கண்ணீர் துடைப்பதும் நம் கடமை என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து