எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கராச்சி : பயணிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவை அடுத்து இந்திய விமானம் அவசரமாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது.
இந்தியாவின் அகமதாபாத் நகரில் இருந்து துபாய்க்கு போயிங் 737 ரக ஸ்பேஸ் ஜெட் விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. அப்போது பயணி ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது.
இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு அருகில் பறந்து கொண்டிருந்தது. இதையடுத்து விமானம் அவசரமாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது.
பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நபரை விமானத்தில் இருந்து சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் கூறும் போது,
அகமதாபாத்தில் இருந்து துபாய்க்கு போயிங் 737 விமானம் சென்றபோது தர்வால் தர்மேஷ் (27) என்ற பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு சர்க்கரை அளவு குறைந்து படபடப்பு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டு துபாய்க்கு புறப்பட்டது என்று தெரிவித்தார்.
கடந்த மாதம் 23-ம் தேதி அன்று ஐதராபாத் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக கராச்சியில் அவசரமாக தரை இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


