முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் ஜூலைக்குள் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடையும் : தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2024      தமிழகம்
Sivdoos 2023-02-25

Source: provided

சென்னை : சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் வரும் ஜூலை மாதத்திற்குள் முடிவடையும் என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார். 

சென்னை ஆலந்தூர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று நேரில் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன. இதில் பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்று விட்டன. சில இடங்களில் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. 

குறிப்பாக முகலிவாக்கம். கொளப்பாக்கம், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வளத்துறை மூலம் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகளுக்கான அனுமதி கடந்த ஆண்டு கிடைத்த நிலையில், சென்ற வருடம் மழைக்கு முன்னதாக பணிகள் நிறைவு பெறவில்லை. 

இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழைக்குள் பணிகள் நிறைவு பெற்று விடும். இந்த பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜூலை மாதத்திற்குள் நிறைவடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து