முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவைத் தீ விபத்து சம்பவத்தில் மேலும் ஒரு இந்தியர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

சனிக்கிழமை, 15 ஜூன் 2024      உலகம்
Kuwait 2024-05-15

குவைத் சிட்டி, குவைத் தீ விபத்து சம்பவத்தில் மேலும் ஒரு இந்தியர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

குவைத்தில் கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் பலியாகி இருந்தனர். மேலும் சுமார் 50 பேர் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களில் 45 பேர் இந்தியர்கள், 3 பேர் பிலிப்பைன்சை சேர்ந்தவர்கள் ஆவர். ஒரு உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 

உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்கள் நேற்று முன்தினம் இந்தியா கொண்டு வரப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

இந்த நிலையில் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இந்தியர் ஒருவர் கடந்த 13-ம் தேதி  இரவு உயிரிழந்து உள்ளார். இதன் மூலம் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 46 ஆகவும், மொத்த எண்ணிக்கை 50 ஆகவும் உயர்ந்திருக்கிறது. 

50 பேரை காவு வாங்கிய இந்த தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் என குவைத் தீயணைப்புத்துறை கூறியிருந்தது. அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள காவலாளி அறையில் ஏற்பட்ட மின் கசிவே இந்த கோர சம்பவத்துக்கு காரணமாகி இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து