முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் டீசல் விலையை 2 ரூபாய் குறைக்க நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி உறுதி

புதன்கிழமை, 10 ஜூலை 2024      தமிழகம்
Rangasamy 2023 07-16

புதுச்சேரி, புதுச்சேரியில் டீசல் விலையை ரூ.2 குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.

லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் கூட்டம் புதுச்சேரியில் நேற்று துவங்கியது. இந்நிகழ்வுக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ''சிறிய மாநிலமான புதுவைக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர்.

வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எங்கெல்லாம் சாலை விரிவாக்கம் செய்ய முடியுமோ அங்கெல்லாம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. மாநில வளர்ச்சிக்கு பங்களிப்பு உள்ளவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி கொடுக்கும். லாரி உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கையை ஏற்று புதுவையில் டீசல் விலையை ரூ.2 குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து