எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்ல, கெஜ்ரிவாலின் உடல் எடை குறித்து ஆம் ஆத்மி தலைவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள திகார் சிறை நிர்வாகம் இதுதொடர்பாக தில்லி அரசின் உள்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், இது போன்ற ஒரு கதை பொதுமக்களைக் குழப்புவதோடு தவறாக வழிநடத்துவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சிறையில் கெஜ்ரிவால் 2 கிலோ மட்டுமே எடை குறைத்துள்ளதாகவும், அவர் எய்ம்ஸ் மருத்துவக் குழுவினால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங், இதன் மூலம் கெஜ்ரிவால் உடல் எடை குறைந்திருப்பதை திகார் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றார். தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறை விசாரித்து வரும் சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கில் முதல்வா் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், ஊழல் வழக்கில் அவரை சிபிஐ கைது செய்துள்ளதால், அவருடைய சிறைவாசம் தொடா்கிறது.
இதனிடையே தில்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கையுடன் பாஜகவும், அதன் தலைமையிலான மத்திய அரசும் விளையாடி வருவதாக ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


