முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி பதவியேற்றுக்கொண்டார்

திங்கட்கிழமை, 15 ஜூலை 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : மத்திய வெளியுறவுத்துறையின் புதிய செயலாளராக விக்ரம் மிஸ்ரி பதவியேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்தித்து விக்ரம் மிஸ்ரி வாழ்த்து பெற்றுக் கொண்டார். வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த வினய் மோகனின் குவாத்ரா, கடந்த மார்ச் மாதத்துடன் ஓய்வுபெற இருந்த நிலையில், ஜூலை 14 வரை பதவி நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் வினய் மோகன் ஓய்வுபெற்றதை தொடர்ந்து, 1989-ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் பிரிவு அதிகாரியான விக்ரம் மிஸ்ரி புதிய செயலாளராக நேற்று காலை பதவியேற்றுக் கொண்டார்.

1989-ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் பிரிவு அதிகாரியான விக்ரம் மிஸ்ரி தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக பணியாற்றி வந்தார். அதற்கு முன்னதாக சீனாவுக்கான இந்திய தூதராக 2019 முதல் 2021 வரை பணியாற்றியுள்ளார். 2020 கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலின் போது பெரும் பதற்றம் ஏற்பட்டபோது இந்தியா - சீனா இடையேயான பேச்சுவார்த்தையில் மிஸ்ரி முக்கிய பங்காற்றினார்.

ஸ்பெயினுக்கான இந்திய தூதராக 2014 - 2016 வரையும், மியான்மருக்கான இந்திய தூதராக 2016 - 2018 வரையும் பணியாற்றியுள்ளார்.ரஷிய - உக்ரைன் போர், ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் வடக்கு அமெரிக்காவில் இந்தியாவின் முக்கிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மத்திய வெளியுறவுத் துறையின் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்திர குமார் குஜ்ரால், மன்மோகன் சிங் மற்றும் நரேந்திர மோடி ஆகிய மூன்று பிரதமர்களின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய தனிப் பெருமை உடையவர். மேலும், ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தர தூதராக விரைவில் மிஸ்ரியை மத்திய அரசு நியமிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து