எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு, இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்ற பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை தொடர்வோம் என தெரிவித்தார்.
தொடரை வென்றது....
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் கடந்த 3 தினங்களுக்கு முன் (ஜூலை 27) தொடங்கியது. ஜூலை 27-ல் முதல் டி20 போட்டியும், இரண்டாவது போட்டி நேற்று முன்தினமும் நடைபெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதிரடி ஆட்டத்தை...
இந்த நிலையில், இந்திய அணி அதன் அதிரடியான ஆட்டத்தைத் தொடரும் என அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டி20 தொடரை வென்ற பிறகு அவர் பேசியதாவது: எந்த மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது குறித்து டி20 தொடர் தொடங்குவதற்கு முன்பாக பேசினோம். குறைந்த இலக்குகளை துரத்தினாலும், அதிக ரன்கள் என்ற இலக்கை துரத்தினாலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறோம். மழை பெய்ததால் 160 ரன்களுக்குள் இலக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். மழை எங்களுக்கு உதவியது. பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள். வீரர்கள் விளையாடிய விதம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
ஒயிட் வாஷ் செய்ய...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 30) நடைபெறுகிறது. இன்றைய போட்டியிலும் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்யுமா என்று ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


