எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை சிகாகோவில், அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு., தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை 8.9.2024 அன்று சிகாகோவில், அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க நாட்டில் மேற்கொண்டுள்ள அரசு முறை பயணம் வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டுகளில், அதிக முதலீடுகளை ஈர்க்கும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்துள்ளதோடு, 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் முனைப்போடு எடுத்து வருகிறது.
அந்த வகையில், வளர்ச்சியின் அடையாளமாக திகழும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் அதிக அளவில் தொடங்கிட முதலீடுகளை ஈர்த்திடும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் மு.க. ஸ்டாலின் அமெரிக்க நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த பயணத்தின் போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், இப்பயணத்தில் முதல்வர், அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து, அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் சார்பில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தமிழ் சொந்தங்களோடு கலந்துரையாடினார்.
அதன் தொடர்ச்சியாக, 8.9.2024 அன்று சிகாகோவில், முதல்வர் ஸ்டாலினை, தமிழ்நாடு அறக்கட்டளை, வட அமெரிக்காவின் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு – FeTNA, சிகாகோ தமிழ்ச் சங்கம், அறம் சிகாகோ, லேக் கவுண்டியில் உள்ள தமிழர்கள் சங்கம், அகரம் தமிழ் அகாடமி, அன்னை தமிழ் அகாடமி, செயின்ட் லூயிஸ் தமிழ் சங்கம், இந்தியா தமிழ்ச் சங்கம், கிரேட்டர் மில்வாக்கி தமிழ்ச் சங்கம், மெக்லீன் மாவட்ட தமிழ்ச் சங்கம், மிச்சிகன் தமிழ்ச் சங்கம், அயோவா தமிழ்ச் சங்கம், வடகிழக்கு விஸ்கான்சின் தமிழ்ச் சங்கம், விஸ்கான்சின் தமிழ்ச் சங்கம், மினசோட்டா தமிழ்ச் சங்கம், டென்னசி தமிழ்ச் சங்கம், கென்டக்கி தமிழ்ச் சங்கம், அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்கம் (ATEA), உலகளாவிய எங்கள் குழுக்கள் சங்கம், தமிழ் தொழில்நுட்ப தொழில்முனைவோர் கவுன்சில் (TTEC), எழுச்சி அமெரிக்கா சங்கம், கொலம்பஸ் தமிழ்ச் சங்கம், கன்சாஸ் தமிழ்ச் சங்கம், வடகிழக்கு ஓஹியோ தமிழ்ச் சங்கம், பியோரியா தமிழ்ச் சங்கம், டேட்டன் தமிழ்ச் சங்கம், அமெரிக்க தமிழ் மருத்துவ சங்கம் (ATMA), அமெரிக்க தமிழ்ப் பள்ளிகள் சங்கம், கிரேட்டர் சின்சினாட்டி தமிழ்ச் சங்கம் (GCTS), குவாட் சிட்டி தமிழ்ச் சங்கம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வரின் பயணம் வெற்றி பெறவும், அதிக அளவிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்திடவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
முதல்வர் ஸ்டாலின், உங்களுக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். தங்களைச் சந்தித்ததில் அளவில்லா மகிழ்ச்சியடைந்ததாகவும், அமெரிக்க வாழ் தமிழர்களின் நல்வாழ்வு சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, அயலகத் தமிழர் நலவாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
05 Feb 2026- சங்கரன் கோவில் கோமதியம்மன் தெப்பம்.
- இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.
- திருமயம் ஆண்டாள் பவனி
-
இன்றைய ராசிபலன்
05 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
05 Feb 2026


