எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டோக்கியோ : ஜப்பானில் நாடாளுமன்றத்தை (கீழ்சபை) கலைத்து பிரதமர் ஷிகெரு இஷிபா நேற்று உத்தரவிட்டுள்ளார். அவர் திட்டமிட்டபடி வரும் 27-ம் தேதி தேர்தலை நடத்த தயாராகி வருகிறார்.
ஜப்பானில் தாராளவாத ஜனநாயக கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியின் தலைவரே பிரதமர் ஆவார். கடந்த 2021-ல் புமியோ கிஷிடா பிரதமராக பொறுப்பேற்றார்.
ஆனால் இவரது அரசாங்கத்தின் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவர் மூன்று ஆண்டுகளே பதவியில் இருந்தார். இதனையடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டது.
பிரதமர் பதவிக்கு அதாவது கட்சி தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டியிட்டனர். இதற்கான வாக்கெடுப்பு கடந்த 1-ம் தேதி நடந்தது. இதில் ஷிகெரு இஷிபா (67) வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார்.
இதையடுத்து, விரைவில் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடிவு செய்தார். வரும் 27-ம் தேதி தேர்தலை நடத்த உள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தார்.
அதன்படி, ஜப்பான் நாடாளுமன்றத்தை (கீழ்சபை) கலைத்து பிரதமர் ஷிகெரு இஷிபா நேற்று உத்தரவிட்டுள்ளார். திட்டமிட்டபடி 27-ம் தேதி தேர்தலை நடத்த தயாராகி வருகிறார். அவரது ஆட்சிக் காலம் 9 நாளில் முடிவுக்கு வந்துள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும், தேர்தல் முடிந்து புதிய அரசு அமையும் வரை பதவியில் இஷிபாவும் அவரது அமைச்சரவையும் பதவியில் நீடிப்பார்கள். அதேசமயம், அவசர அவசரமாக தேர்தலை நடத்தும் பிரதமரின் முடிவை எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


