முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய டெஸ்ட் அணி துணை கேப்டனாக பும்ரா நியமனம்

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024      விளையாட்டு
Bumra 2023 08 18

Source: provided

மும்பை : நியூஸிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் துணை கேப்டனாக பும்ரா அறிவிக்கப்பட்டுள்ளார். 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 170 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

16-ம் தேதி முதல்...

வரும் 16-ம் தேதி முதல் இந்த தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி 24-ம் தேதி அன்று புனேவில் நடைபெறுகிறது. கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நவம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது. வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா வென்றுள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரை 2-0 என்று நியூஸிலாந்து இழந்தது. இந்த நிலையில் இரண்டு அணிகளும் இதில் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.

இந்திய அணி...

ரோகித் சர்மா (கேப்டன்), பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அணியுடன் பயணிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து