முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முட்டுக்காட்டில் தூர்வாரும் பணிகள்: துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2024      தமிழகம்
Udayanidhi 2021 12 12

Source: provided

சென்னை : பக்கிங்காம் கால்வாயின் முகத்துவாராம் அமைந்துள்ள முட்டுக்காட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு மழை நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் கோவளம் ஆறு மற்றும் நீலக்கொடி ஆறுகளின் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளைதுணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, சென்னை சோழிங்கநல்லூர் அக்கறை பகுதியில் உள்ள பக்கங்ஹாம் கால்வாயில் நடைபெறும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், வடகிழக்குப் பருவ மழைக்காலத்தை முன்னிட்டு முதல்வர் வழிகாட்டுதலின்படி, மழை நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுமேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க திமுக அரசு இரவு – பகலாக தூர்வாருதல் உள்ளிட்டப்பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அந்த வகையில், பக்கிங்காம் கால்வாயின் முகத்துவாரம் அமைந்துள்ள முட்டுக்காட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாலை ஆய்வு செய்ததாகவும் அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும், சென்னையைப் பொறுத்தவரை, கொசஸ்தலை ஆறு, அடையாறு, கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய் வழியாக மழைநீர் கடலில் கலந்திட ஏதுவாக, நீர்வளத்துறை சார்பில் நீர்வழித் தடங்களைத் தூர்வாரும் பணிகள் குறித்து அதிகாரிகள், அலுவலர்களிடம் கேட்டறிந்ததாக தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இதற்காக 200-க்கும் அதிகமான எந்திரங்கள், ஆயிரக்கணக்கான பணியாட்கள் என 80 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இப்பணிகள் தொடர ஆலோசனைகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து