முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. அலிகார் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து செல்லும் : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : உ.பி. அலிகார் பல்கலைக்கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதை மறுக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.  

உத்தரபிரதேசம் அலிகார் பல்கலைக் கழகம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு சர் சையது அகமது கான் என்பவரால் நிறுவப்பட்டது. முஸ்லிம் மாணவ, மாணவிகள் அதிகம் பயின்று வரும் இந்தப் பல்கலை கழகத்தில்  50 சதவீத ஒதுக்கீடு இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், அலிகார் முஸ்லிம் பல்கலைகழகம் சிறுபான்மை கல்வி நிறுவனமாக இருந்தது கிடையாது என்று தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தலைமை சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பை வெளியிட்டது. அதில், தலைமை நீதிபதி உள்பட 4 நீதிபதிகள் ஒரு கருத்தையும், 3 நீதிபதிகள் மாறுபட்ட கருத்தையும் தெரிவித்தனர்.

பாராளுமன்ற சட்டத்தால் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் என்பதற்காக, அலிகார் பல்கலைக்கு சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கினர். இதன்மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது உறுதியாகியுள்ளது.  ஓய்வுபெற இருக்கும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு இது கடைசி வேலைநாளாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து