எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு அவைகளும் நேற்று நாள் (டிச.2) முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று காலை 11 மணிக்கு கூடின. மக்களவை முதலில் கேள்வி நேரம் தொடங்கியது. திறன் மேம்பாடு தொடர்பாக ஆந்திரப் பிரதேச எம்பி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பதில் அளித்தார். அதேநேரம், எதிர்க்கட்சி எம்பிக்கள் அதானி, மணிப்பூர் விவகாரங்களைச் சுட்டிக்காட்டி நீதி வேண்டும், நீதி வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். உறுப்பினர்கள் அமைதி காக்குமாறும், கேள்வி நேரம் தொடர அனுமதிக்குமாறும் சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். எனினும், தொடர்ந்து அமளி நிலவியதால் அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
அவை மீண்டும் கூடியதும் சபாநாயகர் இருக்கையில் சந்தியா ரே அமர்ந்து அவையை நடத்த தொடங்கினார். எதிர்க்கட்சிகள் அளித்த ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்று அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அதற்கு பதில் அளித்த சந்தியா ரே, ஒத்திவைப்பு தீர்மானங்களுக்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை என்பதால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது என குறிப்பிட்டார். இதை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடியதும் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா, தேஜ்வீர் சிங் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு அவை சார்பாக அதன் தலைவர் ஜக்தீப் தன்கர் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை என 20 பிரச்சினைகள் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை ஏற்க முடியாது. அவையில் கேள்வி நேரம் தொடர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். எதிர்க்கட்சி எம்பிக்கள் ஏற்க மறுத்து அமளியில் ஈடுபட்டதால் அவை முதலில் நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அவை திட்டமிட்ட ரீதியில் மட்டுமே நடைபெறும் என்றும் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோள் ஏற்கப்படாததை அடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக தன்கர் அறிவித்தார். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்றும் முடங்கின.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026


