முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரையாண்டு தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் வெள்ளம் பாதித்த பகுதியில் வரும் ஜனவரி மாதம் தேர்வு: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      தமிழகம்
Anbil 2

சென்னை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரையாண்டுத் தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார்.

தமிழகத்தில் பெரும் சேதாரத்தை ஃபெஞ்சல் புயல்,மழை ஏற்படுத்தி இருக்கிறது. கடலோர மற்றும் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல பகுதிகளில் குடியிருப்புகள், உடமைகள் நீரில் மூழ்கியதால் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்கள் சேதம் அடைந்தன.

இந் நிலையில், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் டிச.9ம் தேதிக்குள் நிலைமை சீராகாவிட்டால் ஜனவரியில் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார். சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது., வெள்ளம் பாதித்த பகுதிகளில் டிசம்பர் 9ம் தேதிக்குள் நிலைமை சீராகவில்லை என்றால் அங்குள்ள பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் எழுத அறிவுறுத்தி இருக்கிறோம். இது குறித்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்வார்கள். மற்ற இடங்களில் அரையாண்டுத் தேர்வுகள் டிச.9ம் தேதி முதல் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து