முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பங்குச் சந்தைகள் 2வது நாளாக சரிவு

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      வர்த்தகம்
stock-market 2023 06 28

மும்பை, ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளுக்கு முன்னதாக பங்குச் சந்தை வணிகம் 2வது நாளாக  நேற்றும் (பிப். 6) சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 213 புள்ளிகளும் நிப்டி 23, 650 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்குழு புதன்கிழமை ஆலோசனையைத் தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்த ஆலோசனை இன்று வரை நடைபெறவுள்ளது. இதில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இக்கொள்கைக் குழுவின் முடிவுகளுக்கு முன்னதாக, தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தை வணிகம் நேற்று (பிப். 6) சரிவுடன் முடிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 213.12 புள்ளிகள் சரிந்து 78,058.16 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.27 சதவீதம் சரிவாகும். தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 92.95 புள்ளிகள் சரிந்து 23,603.35 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில்0.39 சதவீதம் சரிவாகும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து