எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அளித்த அறிக்கையை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் கட்சி நிர்வாகிகள் அளித்துள்ளனர்.
த.வெ.க. தலைவர் விஜய்யை நேற்று சந்தித்த கட்சியின் நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆகியோர், பிரசாந்த் கிஷோர் அளித்த தேர்தல் வியூக அறிக்கையை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, நேற்று காலை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, கட்சித் தலைவர் விஜய் உடன், பிரசாந்த் கிஷோர், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், நேற்று காலை கட்சியின் நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார்.
த.வெ.க. பொதுச் செயலர் ஆனந்த், தேர்தல் பொதுச் செயலர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருடன் நேற்று காலை 2 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, த.வெ.க. கட்சிக்கு உள்ள வாக்கு விகிதம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய அறிக்கையை பிரசாந்த் கிஷோர் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் த.வெ.க. சார்பில், பல்வேறு கட்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடனான சந்திப்பும் நடைபெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


