முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் உ.பி. சட்டசபைக்குள் தர்ணா

புதன்கிழமை, 23 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

லக்னோ, பிப்.23 - உத்தர பிரதேச சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதை அடுத்து அவர்கள் சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

உத்தர பிரதேச சட்டசபையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  அரசுக்கு எதிரான அமளியில் ஈடுபட்டனர். இதனால் உ.பி. சட்டசபை கூட்டத்தொடர் ஒரு நாள் முன்னதாகவே ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

எதிர்க்கட்சிகளின் அமளியை பொருட்படுத்தாமல்  சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும்  கண்டனம் தெரிவித்தனர். 

சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் கூட நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ், பா.ஜ.க., சமாஜ்வாடி போன்ற எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சட்டசபைக்குள்ளேயே உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் அனைவரையும் சபாநாயகர் உத்தரவுப்படி  சபை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.

சுமார் 100 எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago