முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் வலுவான நிலைப்பாட்டை நம்புகிறோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

சனிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2025      உலகம்
Jelensky 2023 06 27

கீவ், போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் வலுவான நிலைப்பாட்டை நம்புகிறோம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் உக்ரைன், ரஷியா இடையிலான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ரஷிய அதிபர் புதின், எங்களுக்கு இடையே நடந்த போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்று கூறினார். பின்னர் பேசிய டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக இன்னும் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என தெரிவித்தார். மேலும், "ஒப்பந்தத்தை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு இப்போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் உள்ளது. ஐரோப்பிய நாடுகளும் இதில் சிறிது தலையிட வேண்டும். ஆனால் முக்கிய பொறுப்பு ஜெலென்ஸ்கியிடம் உள்ளது" என்று கூறினார்.

புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஜெலன்ஸ்கி உடன் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். மேலும் ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பு தலைவர்களுடனும் அவர் தொலைபேசியில் உரையாடி உள்ளார். இந்நிலையில் வரும் திங்கள்கிழமை, டிரம்ப்-ஐ நேரில் சந்திக்க ஜெலன்ஸ்கி அமெரிக்கா பயணப்பட உள்ளார். டிரம்ப் உடன் நீண்ட, பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்த ஜெலன்ஸ்கி, திங்கள்லன்று டிரம்ப்பை வாஷிங்டனில் சந்திக்க உள்ளதை உறுதிப்படுத்தினார்.  

முன்னதாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், "பேச்சுவார்த்தை நாளில் கூட ரஷியா (உக்ரைனில்) கொலைகளை செய்கிறது. இது நிறைய விஷயங்களைச் சொல்கிறது. போருக்கு ஒரு நியாயமான முடிவு தேவை. போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் முடிந்தவரை உழைக்கத் தயாராக உள்ளது. மேலும் அமெரிக்காவின் வலுவான நிலைப்பாட்டை நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்திருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து