முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டுக்கு இரு புதிய நீதிபதிகள்: மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, நீதிப​தி​கள் ஆலோக் ஆராதே, விபுல் எம்​.பஞ்​சோலி ஆகிய இரு​வரை​யும் சுப்ரீம் கோர்ட் நீதிப​தி​களாக நியமிக்க மத்​திய அரசுக்கு கொலீஜியம் பரிந்​துரை அளித்​துள்​ளது.

தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய், நீதிப​தி​கள் சூர்ய காந்த், விக்​ரம் நாத், ஜே.கே.மகேஸ்​வரி, பி.​வி.​நாகரத்னா ஆகிய 5 உறுப்​பினர்​களை கொண்ட சுப்ரீம் கோர்ட் கொலீஜி​யம் கூடி ஆலோ​சனை நடத்​தி​யது. இதில் நீதிப​தி​கள் ஆலோக் ஆராதே, விபுல் எம்​.பஞ்​சோலி ஆகிய இரு​வரை​யும் சுப்ரீம் கோர்ட் நீதிப​தி​களாக நியமிக்க மத்​திய அரசுக்கு பரிந்​துரை அளித்​துள்​ளது. இந்​தப் பரிந்​துரைக்கு மத்​திய அரசு ஒப்​புதல் அளித்​தால், குடியரசுத் தலை​வர், இரு​வரை​யும் சுப்ரீம் கோர்ட் நீதிப​தி​களாக நியமித்து உத்​தர​விடு​வார்.

சுப்ரீம் கோர்ட் நீதிப​தி​யாக விபுல் எம்​.பஞ்​சோலி நியமிக்​கப்​பட்​டால் அவர் 2031 மே மாதம் முதல் 16 மாதங்​களுக்கு தலைமை நீதிப​தி​யாக பதவி வகிப்​பார். 1964-ம் ஆண்டு பிறந்த நீதிபதி ஆராதே, மத்​தி​யபிரதேச உயர் நீதி​மன்​றத்​தில் கடந்த 2009 டிசம்​பரில் கூடு​தல் நீதிப​தி​யாக நியமிக்​கப்​பட்​டார். மும்பை உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யாக பதவி வகித்தார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி பஞ்​சோலி 7 ஆண்​டு​கள் உதவி அரசு வழக்​கறிஞ​ராக​வும் கூடு​தல் அரசு வழக்​கறிஞ​ராக​வும் பணி​யாற்​றி​னார். 2014 அக்​டோபரில் குஜ​ராத் உயர் நீதி​மன்ற கூடு​தல் நீதிப​தி​யாக​வும் 2016 ஜூன் மாதம் நிரந்தர நீதிப​தி​யாகவும் நியமிக்​கப்​பட்​டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து