Idhayam Matrimony

இன்று விநாயகர் சதுர்த்தி எதிரொலி மலர் சந்தைகளில் பூக்கள் விலை உயர்வு

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Thovalai-Flower 2023 06 28

குமரி, இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தோவாளை, மதுரை உள்ளிட்ட மலர் சந்தைகளில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு விற்பனையானது.

குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இவற்றை வாங்கி செல்ல கேரளாவில் இருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.

பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும். பொதுவாக முகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். பிற நாட்களில் விலை குறைவாக இருக்கும்.

இந்த நிலையில், ஓணம் பண்டிகை தொடக்கம் மற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.400-க்கு விற்பனையான பிச்சிப்பூ நேற்று ரூ.1,000 ஆக விற்பனையானது. இதைபோல மல்லிகை, அருகம்புல், கேந்தி என அனைத்துப் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரை மல்லிகை பூ கிலோ ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படும் நிலையில் நேற்று 4 மடங்கு விலை உயர்ந்து கிலோ ரூ. 2,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 1 கிலோ மதுரை மல்லிகை ரூ.2,500, முல்லைப் பூ ரூ.1,000, செவ்வந்தி, பிச்சி பூ ரூ.1,000, கனகாம்பரம் ரூ.1,000, அரளி ரூ.600, ரூ.150க்கு விற்ற செவ்வந்தி ரூ.250-க்கும், பட்டன் ரோஸ் ரூ. 300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து