முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு ஒத்திவைத்து உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Polics 2025-08-26

Source: provided

ஆம்பூர் : ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதாக நீதி மன்றம் அறிவித்துள்ளது.

ஆம்பூர் கலவர வழக்கில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் 2 எஸ்பிக்கள் தலைமையில் 1,200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அஹமது என்ற இளைஞரை, பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி பவித்ரா காணாமல் போனது தொடர்பாக விசாரிப்பதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் ஷமீல் அகமது அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அந்த இளைஞர் காவலில் இருந்தபோது காவல்துறையினர் தாக்கியதாலேயே உயிரிழந்ததாக ஷமீல் அகமதுவின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதில், ஷமீல் அகமது உறவினர்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என 3,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி பேருந்துகள், காவல்துறை வாகனங்கள், மதுபான கடை, தனியார் மருத்துவமனை உள்ளிட்டவை சேதப்படுத்தியதாக 191 பேர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது

இதன் வழக்கு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்குவதாக வெளியான தகவலை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் தலைமையில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 1,200 -க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து