Idhayam Matrimony

கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை : நேரில் பார்வையிட்ட நிர்மலா சீதாராமன் பேட்டி

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2025      தமிழகம்
Nrimala 2025-09-29

Source: provided

கரூர் : கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;-

கரூரில் நடந்தது அதிர்ச்சி சம்பவம். பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்ததால் ஏற்பட பாதிப்புதான் இந்த நெரிசல்.  பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள். தங்களது உறவினர்களை இழந்து அவர்கள் கதறி அழுவதை பார்க்க முடியவில்லை. அவர்களிடம் வார்த்தைகளால் ஆறுதல் கூற முடியவில்லை. மிகவும் பரிதாபமான நிலைமை. இனி இதுபோன்று ஒரு சம்பவம் நாட்டில் நடக்கக்கூடாது. சம்பவம் அறிந்து பிரதமர் மோடி கரூர் வருவதாக கூறினார். ஆனால் பல்வேறு காரணங்களால் அவரால் வர முடியவில்லை. ஆகவே மத்திய அரசு சார்பில் நாங்கள் வந்துள்ளோம்.

இந்த சம்பவத்தில் எந்த ஒரு கட்சியையும் குறிப்பிட்டு பேச விரும்பவில்லை. யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. கட்சி சார்பில் விமரசனங்களை முன் வைக்க நான் வரவிலை. யார் மீது தவறு என்பதை நிர்ணயிக்க எனக்கு அதிகாரம் இல்லை. கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து