Idhayam Matrimony

இ.பி.எஸ். சுற்றுப்பயணத்திட்டம் தேதி மாற்றம்

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2025      தமிழகம்
EPS 2025-08-25

Source: provided

சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 5-ம் கட்ட சுற்றுப்பயணத் திட்டத்தில், 29, 30, மற்றும் 4-ம் தேதிகளில் தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, முறையே அக்.2, 3, மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5-ம் கட்ட சுற்றுப்பயணத் திட்டத்தில், 29, 30, மற்றும் 4-ம் தேதிகளில் தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, முறையே அக்.2, 3, மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

வரும் 2-ம் தேதி தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி தருமபுரி அரூர், 3-ம் தேதி தருமபுரி, பாலக்கோடு பென்னாகரம், 6 -ம் தேதி நாமக்கல், நாமக்கல் பரமத்தி வேலூர். ஏற்கெனவே 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் நடைபெறுவதாக அறிவித்திருந்த பிரசாரக் கூட்டம், அதே தேதியில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து