முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4,658 அடி நீளம் கொண்டது: சீனாவில் உலகின் மிக உயரமான பாலம் திறப்பு

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2025      உலகம்
China-2 2025-09-29

Source: provided

பீஜிங் : சீனாவில் 2,051 அடி உயரத்தில் 4,658 அடி நீளத்தில் இந்த பாலம் கட்டமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான பாலம் திறக்கப்பட்டுள்ளது.

இன்றைய நவீன உலகில் அனைத்துமே எளிதாக இருந்தாலும், உயரமான மலைப்பகுதிகளில் பாலம் கட்டுவது சவாலான ஒன்று தான். இருப்பினும் மலைப்பகுதிகளில் பாலங்களைக் கட்டுவதில் சீனா தான் உலகளவில் முன்னணியில் உள்ளது. ஏனெனில் உலகின் முதல் 100 உயரமான பாலங்களில் பாதிக்கும் மேல் சீனாவில் உள்ள குய்ஷோ மாகாணத்தில் தான் உள்ளது. 

இந்நிலையில் தற்போது குய்ஷோ மாகாணத்தில் புதிய பாலம் ஒன்றைக் கட்டி முடித்துள்ளது சீனா. இதன்மூலம் உலகின் உயரமான பாலங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தப் பாலம். சீனாவின் தென்மேற்கில் உள்ள குய்ஷோ மாகாணத்தில் 'ஹுவாஜியாங் கிராண்டு கேன்யன்' என்ற பெயரில் உலகின் மிக உயரமான பாலம் திறக்கப்பட்டுள்ளது.இப்பாலம், ஆற்றின் மேற்பரப்பிலிருந்து, 2,051 அடி உயரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

இரு மலைகளுக்கு இடையே 4,658 அடி நீளத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை கட்டி முடிக்க மூன்றாண்டுகளுக்கு மேலானது என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன ஏற்கனவே, மிக உயரமான பாலம் என, பெயர் பெற்ற அப்பகுதியில் உள்ள பெய்பன்ஜியாங் பாலத்தின் 1,854 அடி உயரத்தை, இந்த புதிய பாலம் முந்தியுள்ளது.

ஹுவாஜியாங் கிராண்டு கேன்யன் பாலம் திறக்கப்பட்டதன் வாயிலாக, இரு பகுதிகளுக்கு இடையேயான பயண நேரம் இரண்டு மணி நேரத்தில் இருந்து இரண்டு நிமிடங்களாக குறைந்துள்ளதாக அம்மாகாணத்தின் போக்குவரத்து துறை தலைவர் ஜாங் யின் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே, ஆயிரக் கணக்கான பாலங்களைக் கொண்ட மலைப்பாங்கான மாகாணமான குய்ஷோ, இப்போது உலகின் இரண்டு உயரமான பாலங்களை கொண்டு பெருமையடைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து