முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் 50 கோவில்களில் குடமுழுக்கு: அமைச்சர் தகவல்

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2025      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

Source: provided

சென்னை : சென்னையில் 50 கோவில்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆணையர் அலுவலகத்தில் சென்னை மண்டலங்களை சேர்ந்த இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதன்பின்னர் கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:-  இந்து சமய அறநிலையத்துறையின் மேம்பாட்டிற்கு பல்வேறு வகையில் தேவையான உதவிகளை செய்து தருவதோடு, முன் எப்போதும் இல்லாத வகையில் இதுவரை ரூ.1,187.83 கோடியை அரசு நிதியாக வழங்கியுள்ளது. இந்த துறை தொடங்கப்பட்ட நாள் முதல் எந்த ஆட்சி காலத்திலும் இல்லாத வகையில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 3,707 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டலங்களில் மட்டும் 46 (ii) பட்டியலை சார்ந்த ஓட்டேரி அருள்மிகு செல்லப்பிள்ளைராயர் திருக்கோவில், வில்லிவாக்கம், அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், கொடுங்கையூர், அருள்மிகு பவானியம்மன் திருக்கோவில், கொண்டிதோப்பு. அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில், கொளத்தூர் அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோவில், பெசன்ட்நகர் அருள்மிகு மகாலட்சுமி திருக்கோவில், தேனாம்பேட்டை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், போரூர், அருள்மிகு இராமநாதீஸ்வரர் திருக்கோவில் ஆகிய 8 திருக்கோயில்களுக்கு விரைவில் குடமுழுக்கு நடத்தப்படவுள்ளது.

இந்தாண்டு இறுதிக்குள் சென்னை மண்டலங்களில் 50 திருக்கோவில்களுக்கு திருப்பணி மேற்கொண்டு குடமுழுக்கு நடத்திடும் வகையில் பணிகளை விரைவுப்படுத்திட வேண்டும். கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், நில அளவை பணிகள், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், துறையை கணினிமயமாக்குதல், அலுவலர் மற்றும் பணியாளர்களின் நலன் காக்கும் புதிய திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் இந்த அரசின் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், இறையன்பர்கள் மகிழ்ச்சியுறும் வகையிலும் சென்னை மண்டலங்களை சேர்ந்த செயல் அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து