எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய ஜூனியர் மகளிர் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் முறையே இந்திய அணி 2-3, 5-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டிருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது.
_____________________________________________________________________________________________
மேக்ஸ்வெல் ஆடுவது சந்தேகம்..?
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் பே ஓவலில் நடக்கிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த மேக்ஸ்வெல் வலைப்பயிற்சியின் போது காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆடுவதில் சந்தேகம் நிலவுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என கூறப்படுகிறது.
_____________________________________________________________________________________________
தொடரை கைப்பற்றிய நேபாளம்
வெஸ்ட் இண்டீஸ் - நேபாளம் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சார்ஜாவில் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியில் நேபாளம் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்தது. நேபாளம் தரப்பில் அதிகபட்சமாக ஆசிப் ஷேக் 68 ரன்னும், சந்தீப் ஜோரா 63 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அஹேல் ஹொசைன், கைல் மேயர்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, நேபாள வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 83 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 90 ரன் வித்தியாசத்தில் நேபாளம் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என நேபாளம் கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடக்கிறது.
_____________________________________________________________________________________________
டி20 தொடரில் தினேஷ் கார்த்திக்
இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் சர்வதேச லீக் டி20 தொடரில் விளையாடவுள்ளார். சர்வதேச லீக் டி20 தொடரின் 4-வது சீசன் வருகிற டிசம்பரில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இணையவுள்ளார். இலங்கை அணியின் விக்கெட் கீப்பரான குசல் மெண்டிஸுக்கு மாற்று வீரராக தினேஷ் கார்த்திக் ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் இணையவுள்ளார்.
ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் இணையவுள்ளது தொடர்பாக தினேஷ் கார்த்திக் பேசியதாவது: டிபி வேர்ல்டு சர்வதேச லீக் டி20 தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் இணையவுள்ளதை நினைத்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஷார்ஜா வாரியர்ஸ் இளம் வீரர்கள் அடங்கிய அணி. சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த அணிக்கு அதிகமாக உள்ளது. அவர்களுடன் இணையவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக 60 டி20 போட்டிகளில் விளையாடி 686 ரன்கள் எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக அவர் 412 டி20 போட்டிகளில் விளையாடி, 7437 ரன்கள் குவித்துள்ளார். அதில் 35 அரைசதங்கள் அடங்கும்.
_____________________________________________________________________________________________
பாகிஸ்தான் அணி திடீர் முடிவு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்டு பலியானோரின் குடும்பங்களுக்கு ஆசியக் கோப்பையில் பெற்ற பரிசுத் தொகையை வழங்க பாகிஸ்தான் அணி முடிவுசெய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 9-வது முறையாக கோப்பையை வென்றது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.2.6 கோடியும், இரண்டாம் இடம்பிடித்த பாகிஸ்தான் அணிக்கு ரூ.1.3 கோடியும் வழங்கப்பட்டது. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆசிய கோப்பை போட்டிக்கான தனது முழு ஊதியத்தையும் நாட்டின் ஆயுதப் படைகளுக்கும், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், அவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி அகா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியான குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் குடும்பங்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
5 நாட்கள் தொடர் விடுமுறை? அக்.3-ம் தேதி பொது விடுமுறை வழங்க தமிழக அரசு பரிசீலனை
30 Sep 2025சென்னை, அக்.3-ம் தேதி பொது விடுமுறை வழங்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-09-2025.
30 Sep 2025 -
சி.எம். சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்... கரூர் சம்பவத்தில் 3 நாட்களுக்கு பிறகு மவுனம் கலைத்த விஜய்..! வீடியோ வெளியிட்டு பரபரப்பு பேச்சு
30 Sep 2025சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக 3 நாட்கள் கழித்து மவுனம் கலைத்துள்ள த.வெ.க. தலைவர் விஜய், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, கரூருக்கு நேரில் வருவேன் என்றார்.
-
ஆயுதபூஜை விடுமுறை: இதுவரை 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
30 Sep 2025சென்னை, ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து இதுவரை 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
-
தொடர்ந்து 2-வது நாளாக உயர்வு: ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.87 ஆயிரத்தை நெருங்கியது
30 Sep 2025சென்னை : சென்னையில் நேற்று (செப்.30) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,860-க்கு விற்பனையானது.
-
கரூர் சம்பவம் குறித்து வதந்தி: கைது செய்யப்பட்ட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
30 Sep 2025சென்னை, கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
-
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பதிவு : பதிவிட்ட சில நிமிடங்களிலேயே நீக்கம்
30 Sep 2025சென்னை : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு, பதிவிட்ட சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டது.
-
கரூர் சம்பவம்: வதந்தி பரப்பியதாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது
30 Sep 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் கைது செய்தனர்.
-
கேட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.6 வரை அவகாசம் நீட்டிப்பு
30 Sep 2025சென்னை : இணையதளத்தில் விண்ணப்பிக்க காலஅவகாசம் கடந்த ஆகஸ்டு 28 தொடங்கி செப்டம்பர் 28 முடிவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
தி.மலையில் அதிர்ச்சி சம்பவம்: இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள் கைது
30 Sep 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
சென்னை, தியாகராய நகரில் 164.92 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
30 Sep 2025சென்னை, சென்னை, தியாகராய நகரில் 164.92 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
கரூர் சம்பவம்: முன்ஜாமீன் கேட்டு த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல்: ஐகோர்ட் கிளையில் வெள்ளிக்கிழமை விசாரணை
30 Sep 2025மதுரை, முன்ஜாமீன் கேட்டு த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
-
கரூர் சம்பவத்தில் கைதான த.வெ.க. நிர்வாகிகளுக்கு அக்.14 வரை நீதிமன்ற காவல்
30 Sep 2025கரூர், கரூர் சம்பவத்தில் கைதான த.வெ.க.
-
காசா போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை: அதிபர் ட்ரம்ப் முயற்சிக்கு பிரதமர் மோடி வரவேற்பு
30 Sep 2025புதுடெல்லி, காசா போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் ட்ரம்பின் முயற்சிக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
பாக்., அரசுக்கு எதிராக போராட்டம்: ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் இணைய சேவைகள் முடக்கம்
30 Sep 2025இஸ்லமபாத் : ஆக்கிரமிப்பு காஷ்மீா் முழுவதும் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டது.
-
இங்கிலாந்தில் காந்தி சிலை உடைப்பு
30 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் காந்தி சிலை உடைந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆயுதபூஜை விடுமுறை: சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு
30 Sep 2025சென்னை : ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு பஸ்களை இயக்கம் குறிதது அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு நடத்தினார்.
-
காசா போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்பின் அமைதி திட்டத்திற்கு முஸ்லிம் நாடுகள் முழு ஆதரவு
30 Sep 2025வாஷிங்டன் : ட்ரம்பின் காசா அமைதி திட்டத்திற்கு பாகிஸ்தான் உள்பட முஸ்லிம் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
-
பாதிக்கப்பட்ட குடும்பங்களை எப்போது சந்திக்கிறார் விஜய்? - ஆதவ் அர்ஜூனா விளக்கம்
30 Sep 2025சென்னை : பாதிக்கப்பட்ட குடும்பங்களை எப்போது சந்திக்கிறார் விஜய் என்று ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் போலீசிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய நிலை: எடப்பாடி பழனிச்சாமி வேதனை
30 Sep 2025சென்னை, தமிழகத்தில் போலீசிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக திருவண்ணாமலை சம்பவத்தில் எடப்பாடி பழனிச்சாமி வேதனை
-
மராட்டியத்தில் நிலநடுக்கம்
30 Sep 2025மும்பை : மராட்டியத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
த.வெ.க. கரூர் தெற்கு நகரப் பொருளாளர் கைது
30 Sep 2025கரூர் : தமிழக வெற்றிக்கழகத்தின் கரூர் தெற்கு நகரப் பொருளாளரை போலீசார் கைது செய்தனர்.
-
விஜய் பிரசாரத்திற்காக சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை: ஹேமமாலினி
30 Sep 2025கரூர் : விஜய் பிரசாரத்துக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை என்று ஹேமமாலினி எம்.பி தெரிவித்துள்ளார்.
-
மராட்டியத்தில் கனமழைக்கு 11 பேர் பலி
30 Sep 2025புனே : மராட்டியத்தில் கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
ஹேமமாலினியின் கார் விபத்து
30 Sep 2025கரூர் : கரூர் சென்ற ஹேமமாலினியின் கார் விபத்து ஏற்பட்டது.