முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும்: ராஜ்நாத்சிங் பேச்சு

வியாழக்கிழமை, 2 அக்டோபர் 2025      இந்தியா
Rajnath-Singh 2023 04 02

அகமதாபாத், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் கச் நகரில் உள்ள பூஜ் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் தசரா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு ராணுவ வீரர்களுடன் தசரா பண்டிகையை கொண்டாடினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

பல்வேறு சக்திகள் ஒன்றிணைந்தால் மட்டுமே அசுரர்களை அழிக்க முடியும் என்பதற்கு துர்கா அன்னை நமக்கு காட்டும் அடையாளம். ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய மூன்று படைகளும் நமது பலத்தின் மூன்று தூண்கள். இந்த மூன்று படைகளும் ஒன்றிணைந்து செயல்படும் போதுதான், ஒவ்வொரு சவாலையும் திறம்பட எதிர்கொள்ள முடியும். நமது அரசு தொடர்ந்து தனது படைகளின் வலிமையை நிரூபித்து வருகிறது. நமது ஆயுதப் படைகளின் ஒத்துழைப்பே ஆபரேஷன் சிந்தூரை சாதனை நேரத்தில் செயல்படுத்தியது. போரை நடத்துவது ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் அல்ல, இந்திய படைகள் வெற்றிகரமாக சாதித்தது.

பயங்கரவாதம் உட்பட எந்தவகையான பிரச்சினைகளையும் சமாளித்து தோற்கடிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. உலகின் எந்த சக்தியும் நம் இறையாண்மையை சவால் செய்தால் அமைதியாக இருக்க முடியாது. குஜராத் எல்லையோரம் உள்ள 'சர் கிரிக்' சர்வதேச எல்லைக்கோடு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் தனது உள்கட்டமைப்பை அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ஏதேனும் அச்சுறுத்தலில் ஈடுபட முயன்றால், இந்தியா தீர்க்கமான பதிலடியை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து