முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

வியாழக்கிழமை, 2 அக்டோபர் 2025      தமிழகம்
Train-2023-05-01

திருவண்ணாமலை, விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள கிரிவலப்பாதையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த மாதத்துக்கான (அக்டோபர்) பவுர்ணமி கிரிவலம் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வருகிற 6-ந்தேதி 8 பெட்டிகள் கொண்ட மெமு சிறப்பு ரெயில்கள் விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே இயக்கப்படும். விழுப்புரத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06130) 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

இந்த ரெயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து