முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ. எம்.பி.க்கள் குழு கடிதம் : விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2025      தமிழகம்
Anurag-Thakur 1

Source: provided

சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ.க. எம்.பி அனுராக் தாக்குர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு., ‘கரூரில் சமீபத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோர் குறித்து ஆழ்ந்த கவலையுடனும் வேதனையுடனும் நான் எழுதுகிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு துயரச் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்தது. மக்கள் மிகவும் வலியுடன் உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனதில் இந்தச் சம்பவத்துக்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தச் சூழ்நிலைக்கு நீங்கள் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய ஓர் அறிக்கையை விரைவில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. சம்பவத்துக்கான முதன்மை காரணங்கள்: கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட வழிவகுத்த முதன்மைக் காரணிகள் மற்றும் நிகழ்வுகளின் வரிசை என்ன?

2. கூட்ட மேலாண்மை நடவடிக்கைகள்: நிகழ்வுக்கு முன்னும் பின்னும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், நிர்வகிக்கவும் நிர்வாகம் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்கள் என்ன ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன?

3. காரண பகுப்பாய்வு: ஆரம்ப கண்டுபிடிப்புகளின்படி, தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் இந்த சோகம் ஏற்பட காரணமான குறைபாடுகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் என்ன?

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாநில அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை தயவுசெய்து பரிந்துரைத்து பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாநில அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை தயவுசெய்து பரிந்துரைத்து பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்றும், இந்தச் சம்பவத்தில் கண்டறியப்பட்ட உண்மைகள் குறித்தும் பகிரங்கப்படுத்த வேண்டும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு, கரூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட ஒரு நகலுடன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட இந்தக் கடிதம் உங்கள் கவனத்துக்கு இணைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பொறுப்புணர்வுடன், பொதுமக்களின் கேள்விகளுக்கு தீர்வு காணவும், துறை வாரியாக விரிவான பதில்களையும் கடிதம் கோருகிறது’ என்று அந்தக் கடிதத்தில் அனுராக் தாக்குர் எம்.பி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து