முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலியா

சனிக்கிழமை, 4 அக்டோபர் 2025      விளையாட்டு
Australia 2024-02-06

Source: provided

நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சீஃபெர்ட் 48 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணியில் 4 பேரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மிட்செல் மார்ஷின் அதிரடியால் அந்த அணி 18 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்திருந்தார்.

நியூசிலாந்து தரப்பில் ஜேம்ஸ் நீஷாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

______________________________________________________________________________________________________

தோனியின் சாதனை முறியடிப்பு

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாதில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் எடுத்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இந்திய அணியில் கே.எல்.ராகுல், துருவ் ஜுரெல் மற்றும் ரவீந்திர ஜடேஜா சதம் விளாசி அசத்தினர். ரவீந்திர ஜடேஜா 176 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். முதல் இன்னிங்ஸில் 5 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசியுள்ள முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் மகேந்திர சிங் தோனி 144 இன்னிங்ஸ்களில் 78 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 129 இன்னிங்ஸ்களில் 79* சிக்ஸர்கள் விளாசி தோனியின் சாதனையை ஜடேஜா முறியடித்துள்ளார்.

______________________________________________________________________________________________________

தொடரை வென்ற வங்காளதேசம்

ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. 2வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக இப்ராகிம் சட்ரான் 38 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் நசும் அகமது, ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி 19.1 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என வங்காளதேசம் கைப்பற்றியது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷமிம் ஹொசைன் 33 ரன்கள் எடுத்தார். இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது. 

______________________________________________________________________________________________________

3வது சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், குரோஷியாவின் மரின் சிலிச் உடன் மோதினார். இந்த மோதலில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 7-6 (7-2), 6-4 என்ற நேர் செட்டில் மரின் சிலிச்சை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து