முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரை கவிழ்த்து, காலால் உதைத்து விளையாடிய காட்டு யானைகள்

சனிக்கிழமை, 4 அக்டோபர் 2025      இந்தியா
Elebent 2024-01-18

Source: provided

திருச்சூர் : கேரளாவில் காரை கவிழ்த்தி காலால் உதைத்து விளையாடிய காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி பகுதியை சேர்ந்தவர் சேவியர். இவர் தனது நண்பர்களுடன் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளிக்கு காரில் சுற்றுலா சென்றார். வனப்பகுதியில் உள்ள அதிரப்பள்ளி-மளுக்கப்பாரா சாலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தபோது, திடீரென என்ஜின் பழுதாகி கார் நடுவழியில் நின்றது. இதையடுத்து அவர்கள் காரை சரிசெய்ய பலமுறை முயன்றும் முடியவில்லை. இதனால் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில், சேவியர் தனது நண்பர்களுடன் தவித்து கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் காட்டு யானைகள் சுற்றித்திரிவதாக அந்த வழியாக வந்தவர்கள் தெரிவித்தனர். இதனால் பீதியடைந்த அவர்கள் வேறொரு காரை வரவழைத்து, அதில் அதிரப்பள்ளிக்கு சென்று விட்டனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சேவியர் தனது நண்பர்களுடன் மெக்கானிக் ஒருவரை அழைத்து கொண்டு பழுதான காரை சரிசெய்ய சென்றார். அப்போது இரவில் அப்பகுதியில் நடமாடிய காட்டு யானைகள், சாலையில் பழுதாகி நின்றிருந்த காரை தாக்கி சேதப்படுத்தி தலைகுப்புற கவிழ்த்து பந்தாடியது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் உதவியுடன் கார் மீட்கப்பட்டு சாலக்குடிக்கு எடுத்து செல்லப்பட்டது. காரில் வந்தவர்கள் நடுவழியில் சிக்கியபோது சாமர்த்தியமாக செயல்பட்டு அங்கிருந்து மற்றொரு காரில் சென்றதால் உயிர் தப்பினர். காட்டு யானைகள் காரை தாக்கி, காலால் உதைத்து விளையாடிய காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து