முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர்கள் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 7 அக்டோபர் 2025      தமிழகம்
Ma Subramani

Source: provided

சென்னை : வடகிழக்கு பருவமழை பணிகள் குறித்து அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  ஆகியோர் தலைமையில் சென்னை தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் முக்கிய சேவை துறைகள் அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டத்தில், புகை மருந்து தெளிப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பதாகைகளை வெளியிட்டு, தமிழ்நாடு நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் மேற்பார்வை வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேட்டினை வெளியிட்டு கருத்துரை வழங்கினார்கள்.

தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை போன்ற முக்கிய சேவை துறைகள் வாயிலாக விரிவான ஆலோசனைக் கூட்டம் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மக்களுக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லாத வகையில் அதாவது கொசுக்கள் பாதிப்பு மற்றும் மழைக்கால நோய் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இந்த கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தின் மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் வழங்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்திருக்கிறோம். இந்த கூட்டத்தின் மூலம் மக்களுக்கு பெரும் அளவில் பயன்தரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.என தெரிவித்தார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து