முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான தொடர்: ஆஸி., ஒருநாள், டி-20 அணிக்கு கேப்டனாக மிட்செல் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 7 அக்டோபர் 2025      விளையாட்டு
Bangladesh 2024-09-02

Source: provided

மெல்போர்ன் : இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள ஆஸ்திரேலிய ஒருநாள், டி-20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுப்பயணம்... 

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன.

புதிய கேப்டன்....

இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஒருநாள் அணி விவரம்: 

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கன்னோலி, பென் துவார்ஷியஸ், நாதன் எல்லீஸ், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.

டி20 அணி விவரம்: 

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அப்போட், சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் துவார்ஷியஸ், நாதன் எல்லீஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குன்னமென், மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஜாம்பா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து